வைகாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சு விரட்டு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குன்னத்தூர் கிராமத்தில் ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் வைகாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மாபெரும் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 5-க்கும் மேற்பட்டோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.

தொடர்புடைய செய்தி