மாவட்டத்தில் காவலர் எழுத்துத் தேர்வு 3, 774 பேர் எழுதினர்.

சிவகங்கை மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை காவலர்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி உட்பட 5 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு 4,329 பேர் விண்ணப்பித்த நிலையில், 3,774 பேர் தேர்வை எழுதினர். சிறப்புத் தணிக்கை அதிகாரி அருளரசு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் சுமார் 450 பேர் தேர்வுப் பணியைக் கண்காணித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி