வடமாடு மஞ்சுவிரட்டு 18 காளைகள் 162 வீரர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தம்பிபட்டி கிராமத்தார்கள் மற்றும் பி.எஸ்.கே குடும்பத்தார்கள் இணைந்து, மாடுபிடி வீரர்களான பழனி, சக்தி, கட்டாரி, சசி ஆகியோரின் நினைவாக முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை நடத்தினர். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 18 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 162 வீரர்கள் களமிறங்கினர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப் பரிசு, ஆட்டுக்குட்டி, தென்னங்கன்று, கட்டில் சைக்கிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் போட்டியை உற்சாகமாக கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி