பெண்கள் பிரச்சனைகளைதன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்

சிவகங்கை மாவட்டம் அரசனூர் அருகே ப்ரீத்தி கல்வியியல் கல்லூரியில், தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் திருமதி V. ராதிகா, பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்கள், உரிமைகள் குறித்தும், பிரச்சனைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனப்பக்குவம், சமூகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளுதல், இலவச சட்ட உதவிகளைப் பெறுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கல்லூரி முதல்வர் Dr. N. விஜயலட்சுமி, சமூக நலத்துறை நிர்வாகி திருமதி சுகண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி