மதகுபட்டி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 14 காளைகளும் அதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 126 வீரர்களும் பங்கேற்றனர்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடத்திற்குள் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதலில் களம் இறங்கிய காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர்.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களையும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். போட்டியில் மாடு முட்டியில் 4 வீரர்கள் காயமடைந்தனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை சிவகங்கை, மதகுபட்டி, பாகனேரி, நடராஜபுரம், சொக்கநாதபுரம், நாட்டரசன்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த வடமாடு மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் போட்டியினை உற்சாகமாக கண்டுகளித்தனர்.