நாம் தமிழர் வேட்பாளர் சிவகங்கை பரபரப்பு பிரச்சாரம்

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் இந்துஜா ரமேஷ், சாத்தரசன் கோட்டை, தச்சனேந்தல், புளியங்குளம் போன்ற பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் பேசிய அவர், "யார் சொன்னதற்காக வேண்டுமானாலும் வாக்களிக்கும் நிலை மாற வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளும், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் துயரங்களும் கவனிக்கப்படவில்லை" என்று கூறினார். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி