சென்னையில் செயல்படும் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் அமெரிக்கா சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்தால், அதுகுறித்து வெளிப்படையாகவே தெரிவித்திருக்கலாம். தமிழக அமைச்சரவையில் கூட்டணி கட்சியினர் பங்கேற்பது குறித்து திமுகதான் முடிவு செய்ய வேண்டும். தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கை, இந்திய மீனவர்களின் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்துவதில், சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. யூடியூப் சேனல்களை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.