சிவகங்கை: பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. 8 பேர் காயம்

சிவகங்கை அருகே அரசனூர் பகுதியில் உள்ள 'அம்மையப்பர் கார்மெண்ஸ்' மில்லுக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன், தனியார் பேருந்து முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இந்திராணி, ஜெயலலிதா, மகேஸ்வரி, ராஜகுமாரி, முத்தீஸ்வரி, கயல்விழி, ஆதீஸ்வரி, சத்யா ஆகிய 8 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பூவந்தி போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி