ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்செந்தூருக்கு வேனில் சென்ற 20க்கும் மேற்பட்டோர், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, மானாமதுரை–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.