சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலின் வைகாசி திருவிழா மே 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை காளியாட்ட கண்ணத்தாளுக்கு காப்புக்கட்டுதல் நடைபெற்றது. இரவு வெள்ளி ரதத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாளை காலை தேரோட்டமும், இரவு புஷ்பப் பல்லக்கும் நடைபெறுகிறது.