தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (26) மற்றும் அவரது தாயார் பாண்டியம்மாள் (44) ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தபோது, சிவகங்கை அருகே நல்லாகுளம் விளக்கு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் காயமடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.