சிவகங்கை: மக்கள் விரோத திமுக ஆட்சியை என்டிஏ கூட்டணி வீழ்த்தும் டிடிவி

சிவகங்கை அருகே நகரம்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மரியாதை செலுத்தினார். அவர் அங்கு மாலை அணிவித்து, வீர வணக்கம் செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "வாளுக்கு வேலி அம்பலம் சிறந்த சுதந்திர போராட்ட வீரர். பாகனேரி நாட்டை ஆண்ட மன்னர். மருது பாண்டியர் மன்னர்களோடு இணைந்து போராடி வீரமரணம் அடைந்தவர். 

அவரைப் போற்றுவது, நம் கடமையாகும்," எனவும் "தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி பலமடைந்து வருகிறது. பாஜக தேசிய அளவில் தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலும் செயல்படுகிறது. திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் அனைத்து கட்சிகளும் என்.டி.ஏ கூட்டணியில் இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம். பாஜகவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நாங்களும் முழுமையாக ஒத்துழைக்கிறோம்.

 வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது உறுதி," என்றார். அமித் ஷா மற்றும் மோடி குறித்து சிலர் விமர்சனம் செய்கிறார்கள் எனவும், அதற்கு பதில் தர தேவையில்லை எனவும் குறிப்பிட்ட அவர்: "திமுக அமைச்சர்கள் பயத்தில் பேசிக்கொண்டிருக்கின்றனர். பாஜக-அதிமுக கூட்டணியை விமர்சிக்கும் திமுக, 1999 முதல் 2004 வரை அதே கூட்டணியில் தான் இருந்தது என்பதை மறந்துவிட்டது போல பேசுகிறது," என சாடினார்.

தொடர்புடைய செய்தி