ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள் செல்லும் நடைபாதையில் இந்த மரம் முறிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாரும் அவ்வழியே செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் ஆட்சியர் வளாகத்தை சுற்றியுள்ள நடைபாதை அருகில் உள்ள முறிந்து விழும் ஆபத்தான பயன்படாத நிலையில் உள்ள மரங்களை அலட்சியம் காட்டாமல் விபத்து ஏற்படுவதற்கு முன்பே வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.