முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி தலைமை வகித்து பேசியதாவது: காவல் நிலையத்திற்கு வரும் குழந்தைகளை காவலர்கள் தங்களது குழந்தைகளைப் போல் நினைத்து அவர்களிடம் அன்பாக பேசி, அவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்பட வேண்டும். குழந்தைகள் கைபேசி உபயோகிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நீதிபதி அறிவொளி. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவபிரசாத், போக்சோ நீதிமன்ற நீதிபதி ஆர். கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் என். செந்தில்முரளி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எல். பிரான்சிஸ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி வி. ராதிகா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. அனிதாகிறிஸ்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
50 ஆண்டுகள் டைம் டிராவல் சேர்த்து போல் உள்ளது.. முதல்வர்