சிவகங்கை: பூ வியாபாரி வெட்டிக் கொலை.. 3 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் வாணியன்குடியை சேர்ந்தவர் வெங்கடேசன் (27). சிவகங்கை இளையான்குடி ரோட்டில் பூக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த 19ஆம் தேதி வியாபாரத்தை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது வாணியங்குடி ஆர்ச் அருகே உள்ள ரோட்டில் திரும்பும் பொழுது இருட்டான பகுதியில் எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் கீழே விழுந்த வெங்கடேசனை காரில் இருந்து கீழே இறங்கிய கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு காரில் ஏறி தப்பி ஓடி விட்டனர். தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே பிரவீன் உமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தார். 

இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் மும்முடி சாத்தான் பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா பிரபு (35) என்பவர் உதவியுடன் கூலிப்படையை வைத்து வெங்கடேசனை கொலை செய்தது தெரிந்தது. 

மேலும் இந்த சம்பவத்தில் 12 பேர்கள் வரை ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. தனிப்படை போலீசார் ஏற்கனவே ஒருவரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் கூலிப்படைக்கு பணம் கொடுத்து அனுப்பியதாக மதுரை மாவட்டம் திருமோகூரை சேர்ந்த மணிமாறன், மாணிக்கம், வாடிப்பட்டியை அடுத்த அச்சம்பட்டியை சேர்ந்த ராஜீவ் காந்தி (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி