முன்னதாக கோவில் முன்பு ஏராளமான பெண்கள் நேர்த்தியாக அமர்ந்து ஐந்து முகம் கொண்ட திருவிளக்கு மற்றும் மங்கள பொருட்களை வைத்து கணபதி பூஜை உடன் திருவிளக்கு பூஜையை துவங்கினர். கோவில் அர்ச்சகர் மந்திரங்கள் கூறி தொடர்ந்து 108 போற்றி மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள், மகாலட்சுமி மந்திரங்கள் கூறி திருவிளக்கிற்கு குங்குமம் மற்றும் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து விளக்கு பூஜை செய்தனர். நிறைவாக திருவிளக்கிற்கு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தனர். இதில் கலந்துகொண்ட பெண்கள் குடும்ப நன்மைக்காகவும் புத்திர பாக்கியம் குழந்தை வரம் வேண்டியும் அம்மனை வழிபாடு செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி