இராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி மகாராஜா மாணவ மாணவிகளிடம் பேசுகையில்: வழிச்சாலையில் வேகத்தடைகளை நிதானமாக கடந்து பயண இலக்கை பாதுகாப்பாக அடைவதுபோலவே கல்விப் பயணத்தில் தேர்வுப் படிக்கட்டுகள். தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் பொதுத்தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
மாணவர்கள் தேர்வை கண்டு அஞ்ச வேண்டாம் என்றும் துணிச்சலாக தேர்வை எதிர்கொண்டு அனைவரும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், நகர் மன்ற உறுப்பினர் மகேஷ் உட்பட கலந்து கொண்டனர்.