தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று அலங்கார தீபம் நாகதீபம் கும்ப தீபம் நட்சத்திர தீபம் பஞ்சமுக தீபம் மற்றும் ஷோடச உபச்சாரங்கள் நடைபெற்று உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. நிறைவாக ஏழு முக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் மங்கள வாத்தியங்கள் மற்றும் வானவெடிகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மின்னொளியில் பவனி வந்த கண்ணுடைய நாயகி அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.