சிவகங்கை: அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வயலில் நாற்று நட்டு வாக்கு சேகரிப்பு

சிவகங்கை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், மதகுபட்டி அருகே விவசாய வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் சேர்ந்து நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து வயலுக்கு வந்த அவர், அங்கேயே வேட்டியை மடக்கிக் கட்டி பெண்களுடன் இணைந்து பணியாற்றினார். இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி