சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தெற்கு ஒன்றியத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏ. குழந்தை இராணி மற்றும் சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்து பாரதி ஆகியோர் கலந்துகொண்டு கட்சிக்கொடியை ஏற்றி, ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.