சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக விரிவுரையாளர்கள், தங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நிர்ணயித்த ரூ. 57, 800 ஊதியம் வழங்க வேண்டும், 12 மாதங்களும் ஊதியம், PF/EF உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, ஓய்வு பெறும் விரிவுரையாளர்களுக்கு ரூ. 2. 50 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் சுமார் 8, 000-க்கும் மேற்பட்ட தற்காலிக விரிவுரையாளர்கள் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 25, 000 பெற்று வருவதாகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.