டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அரசு மதுபானக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை விதிகளை மீறி பயன்படுத்துவதை நிறுத்தி, மாற்று வழியில் அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சிவகங்கை மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எந்த உத்தரவும் இல்லாமல் நிர்பந்தம் செய்து, ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டிய பணியை டாஸ்மாக் ஊழியர்களை செய்யச் சொல்லி வற்புறுத்துவதை கைவிட வலியுறுத்தி, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி