சிவகங்கை மாவட்டம் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பங்கேற்று தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கையில் தேசியக் கொடி ஏந்தி "வந்தே மாதரம்" பாடலை ஒரே நேரத்தில் பாடி தேசபக்தி உணர்வை வெளிப்படுத்தினர்.