சிவகங்கையில் மினி பேருந்து விபத்தில் மாணவன் பலி

சிவகங்கை அருகே ஏனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (16) என்ற மாணவர், பள்ளிக்குச் செல்லும் போது மினி பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது நண்பர் சூர்யா காயமடைந்துள்ளார். பள்ளி நேரங்களில் போதுமான அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி