இக்கோவிலில் புதிதாக பக்தர்கள் உபயோகமாக பாலாம்பிகை உற்சவர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக உற்சவர் பாலாம்பிகைக்கு புது பட்டு சேலை அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் நேர்த்தியாக அமர்ந்து மங்கல பொருட்கள் மற்றும் பாலாம்பிகை திரு உருவ படங்களை வைத்து அம்மனின் மந்திரங்கள் கூறி வழிபாடு செய்தனர்.
நிறைவாக குங்குமத்தால் அர்ச்சனைகள் செய்து தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.