சிவகங்கை: மனை வாங்க சென்ற பெண் கொடூர கொலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நிலம் வாங்க சென்ற மகேசுவரி (38) என்பவர், காரில் அழைத்துச் சென்ற நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். வீட்டுமனை விலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அவரது தலையை கார் கதவில் மோத வைத்தும், கழுத்தை நெரித்தும், முகத்தை சிதைத்தும் கொலை செய்துள்ளனர். பின்னர், மகேசுவரி அணிந்திருந்த சுமார் 20 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி