சிவகங்கை: சட்டவிரோத மது விற்பனை; ஒருவர் கைது

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை EB அலுவலகம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிவகங்கை தாலுகா போலீசார் சோதனை நடத்தினர். இதில் உறுப்போக்கி பகுதியைச் சேர்ந்த அக்குச்சாமி என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி