சிவகங்கை மாவட்டத்தில், முன்னாள் படை வீரர்கள் அல்லது அவர்களைச் சார்ந்தோரின் குழந்தைகள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வியாண்டில் இட ஒதுக்கீட்டின்படி மேற்படிப்பில் சேர சார்ந்தோர் சான்று தேவைப்பட்டால், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து சான்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். இந்த சான்றிதழ்கள் மேற்படிப்பில் சேர்வதற்கு அவசியமானவை.