சிவகங்கை: தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை மூலம்.. ரூ.11.20 கோடிக்கு தீர்வு

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி, கூடுதல் மாவட்ட நீதிபதி பி. பார்த்தசாரதி, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி என். செந்தில்முரளி, சார்பு நீதிபதி ஆர். பாண்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி வி. ராதிகா, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதர்ஷினி, குற்றவியல் நீதித்துறை நடுவர் (எண்: 1) நீதிபதி பி. செல்வம், குற்றவியல் நீதித்துறை நடுவர் (எண்: 2) நீதிபதி இ. தங்கமணி மற்றும் வழக்குரைஞர்கள் ஓ. ஜானகிராமன், பி. செந்தில்குமரன், டி. செந்தில்குமார் ஆகியோர் சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்தனர். தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1756 குற்றவியல் வழக்குகளும், 104 காசோலை மோசடி வழக்குகளும், 186 வங்கிக் கடன் வழக்குகளும், 266 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 72 குடும்பப் பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும் மற்றும் 389 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், என மொத்தம் 2773 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1866 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு 10,56,91,981 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

தொடர்புடைய செய்தி