சந்தைக்குள் நடந்து சென்று பொருட்கள் வாங்க சிரமப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வியாபாரிகள் கூறுகையில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் வியாபாரம் செய்கிறோம். கடையின் மேல் பகுதியில் காய்கறிகள் அனைத்தையும் பரப்ப முடியாது. என்றனர். சந்தை ஒப்பந்ததாரர் தரப்பு கூறுகையில், சந்தையில் 172 கடைகள் தான் உள்ளது. வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அனைவருக்கும் சந்தையில் இடம் கொடுக்க வேண்டும். மக்கள் நடந்து சென்று காய்கறி வாங்குவதில் எந்த தொந்தரவும் இல்லை என்றார். திறக்கப்பட்டு நான்கு வாரங்களாகியும் புதிய சந்தை வளாகம் எப்படி செயல்படுகிறது. மக்களுக்கு வசதியாக உள்ளதா என்பதை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்ற சுப்ரியா சாகு ஐஏஎஸ்