இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டு எடுத்துரைத்தார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வரும் முத்துப்பட்டி சேர்ந்த ஆனந்தி தெரிவித்ததாவது: "நாங்கள் மாதம் ₹13,100 சம்பளம் பெறுகிறோம். ஒரு நாள் விடுப்பு எடுத்தாலே அந்தத் தொகையும் குறைத்துவிடுகிறார்கள்" என குற்றம் சாட்டினார்.
அப்பொழுது மேடையில் இருந்த எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், "இந்தப் பிரச்சனைகளுக்கு பதிலளிக்கக் கூடிய அதிகாரிகள் யாரும் வந்துள்ளீர்களா?" என கேட்டார். அதற்குத் தாமதமின்றி மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, "இது என் தவறுதான் மேடம், அதிகாரிகள் வரவில்லை" என கூறி மன்னிப்புக் கேட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.