சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநில தகவல் ஆணையர்கள் ஆர். பிரியகுமார், வி. பி. ஆர். இளம்பரிதி, எம். நடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். செல்வசுரபி முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சட்டத்தின் நோக்கம், தகவல்களை கோரும் வழிமுறைகள், பொதுத் தகவல் அலுவலரின் கடமைகள், மனுதாரரின் உரிமைகள் குறித்து விளக்கப்பட்டது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், தொலைந்து போன ஆவணங்கள் என தகவல் அளிக்காமல், அவற்றை மீண்டும் உருவாக்கி தகவல்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்துத்துறை பொது தகவல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.