சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்து, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில், 01.01.2026-ஐ தகுதிநாளாகக் கொண்டு நடைபெற்று வரும் திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருத்தப் பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளவும், வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.