வருவாய்த்துறை ஊழியர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நேற்று தொடர்ந்தது. போராட்டக்காரர்கள், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்றுதல், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்குதல், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் 10 சதவீத பிடித்தத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி