சிவகங்கை: பொங்கல் தொகுப்பை வாங்க மறுத்து போராட்டம்

சிவகங்கை அருகே காட்டு நெடுங்குளம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த நியாய விலை கடை இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள், கடையை பழைய இடத்திற்கே மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். பொங்கல் தொகுப்பை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம், வட்ட வழங்கல் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி, கடையை மாற்றமாட்டோம் என உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி