கோரிக்கை மனுக்களை, கொஞ்சமும் நாகரிகமின்றி மாநில நிர்வாகிகள் முன்னிலையிலேயே கிழித்து, குப்பைத் தொட்டியில் வீசி, வெளியே செல்லுமாறு மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அவரை கண்டித்து இன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்க மாவட்டத் தலைவர் லூயிஸ் ஜோசப்பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் வேலுச்சாமி, தனபால், கார்த்திக், மாவட்ட இணைச் செயலாளர்கள் மலர்விழி, ஷேக் அப்துல்லா, சகிலா, சிவா, மாவட்ட தணிக்கையாளர்கள் குமரேசன், பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்