தமிழக அரசு மதுபான காலி பாட்டில்களை திரும்பப் பெற்று ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ. 10 வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டத்தை டாஸ்மாக் கடை ஊழியர்களே மேற்கொள்ள வேண்டும் என நிர்வாகம் நிர்பந்திப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. தனி ஊழியர் நியமனம், தனி இடம் ஒதுக்கீடு, தனி ஒப்பந்த முறை ஆகியவற்றை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்டத்தில் 115 டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தொழிற்சங்கங்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்று, கடைகள் திறக்கப்பட்டன.