சிவகங்கை: ஒரே நாளில் 700 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்பத்தூர் வட்டம், கும்மங்குடி கிராமம் அருகே அரசுப் பேருந்துகள் மோதி 11 பேர் உயிரிழந்த விபத்தைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின் பேரில், போக்குவரத்து ஒழுங்கை கடுமையாக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாதவர்கள், கைபேசியில் பேசியபடி ஓட்டியவர்கள், அதிவேகமாக ஓட்டியவர்கள், எண் பலகை இல்லாத வாகனங்கள், குடிபோதையில் ஓட்டியவர்கள் என பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி