அரியலூரில் இருந்து கரும்புகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை அருகே உள்ள சக்தி சுகர் சர்க்கரை ஆலைக்கு லாரி சென்று கொண்டிருந்தது. மதகுபட்டி அருகே ராமலிங்காபுரம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.