சிவகங்கை: இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆட்சியரிடம் மனு

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், ஜமாஅத் நிர்வாகம், ஜமாஅத்துல் உலமா சபை, எஸ்டிபிஐ, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, தேசிய முஸ்லீம் லீக் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், "திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளரும், பள்ளிவாசல் தலைவருமான ஜாகீர் உசேன், வக்ஃபு வாரிய சொத்து சம்பந்தமாக போராடி உயிரிழந்தார். 

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும், அவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, ஜாகீர் உசேன் கொலை வழக்கை சி. பி. சி. ஐ. டி விசாரணைக்கு மாற்ற வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்தை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி