ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் எடப்பாடிக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் கண்டன முழக்கமிட்டனர். பின்னர் மாவட்டச் செயலாளர் அசோகன் அளித்த பேட்டியில்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் NDA கூட்டணியிலிருந்து விலகியிருப்பது வரவேற்கத்தக்கது.
தன்மானத்தை இழந்து ஒரு கூட்டணியில் பயணம் செய்வதை விட தனித்து இருந்து வெற்றி காண்பதே மேல் என்ற அடிப்படையில் தொண்டர்களுக்கு எல்லாம் ஓபிஎஸ் ஐயா பாஜகவிலிருந்து விலகியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி அதுசேருகின்ற கூட்டணி எல்லாம் அதன்மேல் ஏறி சவாரி செய்து கொண்டு அந்த இயக்கத்தை அழிக்கும் செயலை செய்து வருகிறது.
இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி கட்சிகளை கொன்று தின்று அதனுடைய நோக்கமாக கொள்கையாக உள்ளது. அதேபோல் ஓபிஎஸ்ஐ மரியாதை குறைவாக நடத்தியதால் தன்மானத்தோடு வெளியேறியிருக்கிறார். அதனை வரவேற்று நாங்கள் எல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். விஜய் கூட்டணி அமைந்தால் வரவேற்கத்தக்கது என்றார்.