சிவகங்கை அருகே பையூர் பிள்ளை வயல் பகுதியில் இன்று காலை சாலை விபத்து ஏற்பட்டது. மதுரையிலிருந்து தொண்டி நோக்கிச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த மகாலிங்கம் (சென்னைவாசி) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.