காளையார்கோவில் இளையான்குடி நெடுஞ்சாலையில் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே கிழவனூர் பகுதியைச் சேர்ந்த சற்குணம் (57) நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது அறிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன் சற்குணத்தின் அண்ணன் கருப்பையா வீட்டருகே மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கருப்பையா ஹரிதாஸை தாக்கியதாகக் கூறப்படும் முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி