பழைய ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10% ஓய்வூதிய உயர்வு, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850, மருத்துவ காப்பீட்டு திட்டக் குறைகளை நீக்கி முழுமையான சிகிச்சைத் தொகை, கம்முடேசன் திரும்ப செலுத்தும் காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 11 ஆண்டுகளாக குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்க, மாநிலச் செயலர் ஆர். பாண்டி தொடக்கி வைத்தார். மாவட்டச் செயலர் நடராஜன், துணைத்தலைவர் டி. விஸ்வநாதன், வட்டக் கிளைச் செயலர் சேதுபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஜேக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஆர். ராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி