சிவகங்கை: சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தேர்தல் வாக்குறுதியின்படி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ரூ. 7850 - மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில் ஒட்டுமொத்த தொகை எஸ்பிஎப், ஜிபிஎப் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரில் கருப்பு உடை அணிந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடையணசாமி தலைமை வகித்தார். நிதிக்காப்பாளர் நடராஜன் வரவேற்றார். கோரிக்கை விளக்கி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் முத்தழகு தொடக்கவுரை ஆற்றினார். மாநிலச்செயலாளர் பி. பாண்டி கண்டன உரை ஆற்றினார். 

தோழமைச்சங்க நிர்வாகிகள் அ. பாண்டி, இரா. மாரி, இராமானுஜம், எஸ். உதயசங்கர், கோபால், பெரிநாயகி, பா. லதா, மணிமுரசு உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலர் இரா. இராதாகிருஷ்ணன் பேசினார். மாவட்ட மகளிர்குழு நிர்வாகி கனகஜோதி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி