இந்திய அரசு, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து நடத்தும் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வருகின்ற திங்கட்கிழமை, 9.2.2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை, முத்துப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மாநில, மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தொழிற் நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்று பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை நடத்தவுள்ளன. கூடுதல் விபரங்களுக்கு 04575 - 290625 அல்லது 9342192184, 9894211427, 9942099481 ஆகிய எண்களிலோ அல்லது மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் (முதல் தளம்), சிவகங்கை என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.