அழகாபுரி பகுதியில் வீட்டின் பீரோவை உடைத்து பணம் திருட்டு

காளையார்கோவில் அருகே அழகாபுரி பகுதியில் சீதாலட்சுமி அவர்களின் வீடு தனிமையான இடத்தில் அமைந்துள்ளது. அவர் பகல் நேரங்களில் வீட்டில் இருந்தும், இரவு நேரங்களில் பக்கத்து வீட்டில் தங்கியும் வந்துள்ளார். இந்நிலையில், காலை வீடு திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த ரூ. 20,000 பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி