சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா பெரியகண்ணனூர் கண்ணகிபுரத்தைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி பிரியதர்ஷினி (21), பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்களது குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி, குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.