சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், நலத்திட்ட பயனாளிகளுக்கும் புதிய பயனாளிகளுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், சமூக பாதுகாப்பு நலத்திட்டங்கள் மற்றும் “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளத் திட்டத்தை காணொளிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சிவகங்கை தனியார் மகாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.