நிர்மலா சீதாராமனுக்கு நேரடி பதிலடி அமைச்சர் கேள்வி

சிவகங்கை தனியார் மஹாலில் நடைபெற்ற திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் வாய்ப்பை பிற மாநில மாணவர்கள் பறிப்பதாகக் குற்றம் சாட்டினார். இதற்குக் காரணமானவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்றும், மத்திய அரசு கல்விக்கான நீதியை இதுவரை வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். வரும் 14 மற்றும் 15 தேதிகளில் சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும், திமுகக்கும் புதிய உற்சாகம் ஏற்படும் என்றும், அவர் காரைக்குடியில் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று மிதிவண்டிகளை வழங்குவார் என்றும், சிங்கம்புணரியில் புதிய கட்டிடத்தைத் திறந்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி